அமெரிக்கா சென்ற பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு...! அவசர அவசரமாக ஓமனில் தரையிறக்கம்..!

அமெரிக்கா புறப்பட்ட நடிகர் ராஜுவுக்கு நடுவானில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவசரமாக விமானத்தை ஓமனில் தரை இறக்கம் செய்யப்பட்டு உள்ளது

இதன் பின்னர் சிகிச்சைக்காக நடிகர் ராஜுவை ஒமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள  கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ரஜினி கமல் சத்யராஜுடன் நடித்தவர்..!

நடுகர் ராஜு மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ராஜு. அதுமட்டுமில்லாமல், தமிழில் ரஜினி கமல் சத்யராஜ் பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் ராஜு

இது தவிர காட்டன் மேரி என்ற ஆங்கில படத்திலும், பிரபல சீரியல்களில் முக்கிய  காதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

மேலும் இரண்டு படங்களையும் இயக்கி உள்ளார் இவர்.

சினிமாவில் அறிமுகம்..!

1981 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னதாக அவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் தன்னுடைய திறமையால், கேப்டன் அளவுக்கு உயர்ந்தவர் தான் ராஜு. கேப்டன் அளவுக்கு உயர்ந்தாலும் சினிமா மீது கொண்ட ஆர்வம் அவரை வேலையை விட செய்தது.

இதனால் தான் நடிகர் ராஜுவை கேப்டன் ராஜு என அழைகின்றனர். மலரும்  நினைவுகளாக இதையெல்லாம் பகிர்ந்தாலும், தற்போது ராஜு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.