கலைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஒப்புக்கொண்டுவிட்டு ரூ.37 லட்சத்தை ஆட்டயப் போட்டதோடு நிகழ்ச்சிக்கும் வராமல்  டிமிக்கி கொடுத்த ரஜினி பட கதாநாயகி மீது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பாஜக அதிருப்தி தலைவரும், இந்தி நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக் ஷிசின்ஹா. இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இந்தியில் சல்மான் கானின் ’தபாங்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் சோனாக் ஷி.

தமிழில் நடிகர் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் சோனாக் ஷி அவருக்கு ஜோடியாக நடித்தார். ’லிங்கா’ வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததால் அடுத்து அவர் தமிழ்ப்படங்களில் தலைகாட்டவில்லை.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக  இந்தியா ஃபேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரூ.37 லட்சம் பணம் பெற்றிருந்தார். அவருக்கு 4 தவணைகளில் பணம் வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில்  நிகழ்ச்சியில் பங்கேற்க சோனாக் ஷி மறுத்துவிட்டார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறும் சோனாக் ஷியிடம் கேட்டனர். ஆனால் அதற்கு சோனாக் ஷிபணத்தைத் திரும்பத் தர மறுத்ததாகத் தெரிகிறது.

இதனிடையே நேற்று உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் போலீஸ் நிலையத்தில் சோனாக் ஷி மீது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர் பிரமோத் சர்மா இந்த புகாரைக் கொடுத்துள்ளார். அதன்படி நடிகை சோனாக் ஷி, மாளவிகா பஞ்சாபி, துமில் தக்கர், எட்கர் சகாரியா, அபிஷேக் சின்ஹாஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.