வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிப் பெற்ற தும்ஹாரி சுலு படம், தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீ-மேக்காகி உள்ளது. ஜோதிகா, வித்யாபாலன் வேடத்தில் ரேடியா ஜாக்கியாக நடித்திருக்கிறார். 

குறும்புத்தனமான குடும்ப பெண்ணான ஜோதிகாவுக்கு, ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. அதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, பிரச்னைகள் எல்லாவற்றையும் உணர்வுப்பூர்வாக படமாக்கி உள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கார்த்தி வெளியிட்டார். 

இந்தப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் காட்சிகள் டிரைலரின் கடைசியில் இடம் பெற்றுள்ளது. அதில் சிம்பு, ஜோதிகாவிடம், "உலகில் அதிகமான மக்கள் உபயோகிக்கும் வார்த்தை என்ன தெரியுமா ஹலோ. ஆனால் நீங்கள் சொல்லும் ஹலோ வார்த்தை வேற லெவல்" என்கிறார். 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'என்ஜிகே'. இப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்தனர். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடையாததால் படத்தைத் தள்ளி வைத்தனர். சரி, பொங்கலுக்காவது படம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்த்தால் படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் படமாக்கப்படாமல் உள்ளது என்கிறார்கள்.

இந்த மாத இறுதியில் சென்னையில் ஆரம்பமாகும் கடைசிகட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெற உள்ளதாம். அது டிசம்பர் முதல் வாரம் வரை செல்வதால் படத்தை பொங்கலுக்கு வெளியிட வாய்ப்பே இல்லை. பிப்ரவரி முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் தான் படம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செல்வராகவன் திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடிக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். இதனால், அவருக்கும் சூர்யாவுக்கும் இடையில் கூட மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், திரைத்துறையினருக்கு நேரடியாக சவால் விடுத்து மிரட்டி வருவதோடு, அதை செய்தும் காட்டி வருகின்றனர். 

கடந்தவாரம், சர்கார் படத்தை ஹெச்.டி., தரத்தில் வெளியிடப்படும் என அறிவித்தனர். இதை முறியடிப்போம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. மாறாக சர்கார் படம் அன்றே இணையதளத்தில் வெளியானது.


இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படம் என்கிற பெருமையுடன் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்தை, படம் ரிலீஸாகும் நவ., 29-ம் தேதி அன்றே வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் மிரட்டல் விடுத்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலரது நடிப்பில் 550 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களில் இல்லாத அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

இப்படத்திற்கான பின்னணி இசையை ஏஆர் ரகுமான் முடித்து இப்போது மிக்சிங் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காகப் படத்தைப் பார்க்கும் ரஹ்மான் படத்தைப் பற்றிய அவரது அனுபவத்தை 'OMG' என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.

“6வது ரீலை மிக்சிங் செய்து கொண்டிருக்கிறேன். 'OMG', எமோஷனல் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் வரலாறு' என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் '2.0' படம் வெறும் கிராபிக்ஸ் மிரட்டலாக மட்டுமல்லாமல் எமோஷனலாகவும் இருக்கும் என்று தெரிய வருகிறது.