இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ என 2012ல் வெளியான வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இயக்குநர் வினோத் இயக்கத்திலும், போனி கபூரின் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் உருவாகிவருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபடும்போது நேரிட்ட விபத்தில், நடிகர் அஜித்குமார் காயமடைந்தார்.  

சென்னையில் இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித்குமார் பைக் ஸ்டண்டில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அஜித்குமார் பைக்கில் இருந்து பள்ளத்தில் பாய்ந்தார். இதில் அஜித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்த நடிகர் அஜித் காயத்தோடு வந்து மீண்டும் படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் காயோத்தோடு படபிடிப்பில் ஈடுபட்டதை பார்த்த படக்குழுவினரும், உடன் நடிக்கும் நடிகர்களும் வியப்படைந்தனர். தன்னுடைய காட்சிகளின் படபிடிப்பு முடிந்த பின்னர் அஜித்தின் குடும்ப மருத்துவரின் சென்று சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.