Asianet News TamilAsianet News Tamil

‘நர்ஸ்’ நடிகையை பண்ணை வீட்டில் வைத்து ராப்பகலா நடத்திய சம்பவம்!! ஆசை தீர அனுபவித்த மாஜி...

கப்பல்ல பொண்ணு வந்தா எனக்கொன்னு, எங்க சித்தப்பனுக்கு ஒண்ணுன்னு கேட்பானாம் ஒருத்தன்! என்று ஊர்ப்பக்கம் மட்டுமில்லை சிட்டிப் பக்கமும் சொல்வாய்ங்க. ஆனா இன்னைக்கு நாம மீட் பண்ணப்போற ஆளுக்கு கப்பல்ல பொண்ணு வர்ல ஆனா ஆத்துல பணம் வந்துச்சு. என்னண்ணே சொல்றீங்க, அதெப்டிண்ணே ஆத்துல பணம் வரும்?! என்று நாதஸ் மாதிரி குறுக்கால கேள்வி கேட்காம, நெட்டுக்கா வாசிங்க ரீஸன் புரியும்.

Ex Minister relationship with Nurse actress
Author
Chennai, First Published May 30, 2019, 12:44 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நம்மூர் அரசியல்ல ஒரு ஆட்சி தோற்று இன்னொரு ஆட்சி வந்து ஒக்காந்ததும் பார்க்குற மொத வேலை?...பழைய ஆட்சியில அமைச்சரா இருந்தவய்ங்க மேலே ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு’ அப்படிங்கிற தலைப்புல ரெய்டு நடத்தி, வழக்கு போடுறதுதானே! அப்டித்தான் ஒரு தபா நடந்துச்சு. அப்போ பெரிய அமைச்சரா இருந்தவரோட சீனியர் அல்லக்கையா இருந்தாரு இந்த மனுஷன். ரெய்டு வர்றது தெரிஞ்சதும், பெரிய பெரிய பிளாஸ்டிக் பைகள்ள பணத்தைப் போட்டு, அதை நாலஞ்சு சாக்கு மூட்டையில கட்டி ஆத்துல போட்டுவிட்டாங்க. 

ஆத்துக்கு அக்கரையில நின்னு அதை எடுத்து சேஃப்டி பண்ணவேண்டியது இவரோட வேலை. ஆனா இதுதான் சமயமுன்னு ஒரு மூட்டையை இவரு லவட்டிட்டாரு. கேட்டதுக்கு ‘ஆத்தோட ஒரு மூட்டை போயிடுச்சுண்ணே. இப்டியெல்லாம் என்னைய நீங்க சந்தேகப்பட்டா கட்சி மாறிடுவேன்.’ன்னு மாஜியை மிரட்டிட்டு வெளியேறிட்டாரு. சொன்னபடியே கரன்ஸியோட கட்சி மாறினவரு, கையில இருந்த ஒரு மூட்டை பணத்தை வெச்சு தொழில் ஆரம்பிச்சு, ஆளுங்கட்சியில அம்மாம் பெரிய தொழிலதிபர் ஆயிட்டாரு. 

அப்புறம் அந்தக் கட்சியிலேயே வட்டம், மாவட்டமுன்னு ஆகி கட்டக் கடைசியில எம்.எல்.ஏ. சீட் கிடைச்சு அமைச்சராகவும் ஆயிட்டாரு. அமைச்சர் ஆகுற வரைக்கும் கண்ண மூடிக்கிட்டு கன்னாபின்னானு உழைச்ச மனுஷன், அதுக்குப் பிறகு லவ்கீக வாழ்க்கையில புகுந்து வெளயாட ஆரம்பிச்சாரு. 

ஆன்னா ஊன்னா கோலிவுட், மோலிவுட், டோலிவுட் கிளிங்களை அள்ளிப் போட்டுக்கிட்டு டேட்டிங் போறதுதான் அண்ணனோட ஸ்டைலே. பொதுவா ஒரு தடவை ஊர் சுற்றுன கிளி கூட நெக்ஸ்ட் டைம் டச்சிங்கே வெச்சுக்க மாட்டார் அண்ணன். ஆனால், எல்லா விளக்குக்கும் ஒரு விதி விலக்கு இருக்குமில்லையா, அப்டித்தான் வந்து சேர்ந்துச்சு அந்த பொண்ணு. 

தமிழ் சினிமாவுல மைல் ஸ்டோன் படம் ஒண்ணுல நடிச்சு ‘பக்கத்து வீட்டுப் பொண்ணு’ன்னு பேர் வாங்கின நடிகை அடுத்த ரெண்டு மூணு வருஷத்துல கவர்ச்சிக் கன்னியா மாறிப் போனார். அம்பூட்டு அழகு இருந்தும், எம்பூட்டு இறங்கி நடிச்சும் கூட அப்டியொன்னும் இண்டஸ்ட்ரீயில கலக்கிடல. இதுல பர்ஷனல் பஞ்சாயத்து வேற. கார்டியனா வந்த சின்னம்மா ஒரு கட்டத்துல காட்டேரியா மாறி டார்ச்சர் கொடுக்க, பொண்ணு தனிக்குடித்தனம் வந்துடுச்சு. 

அப்போதான் எதேச்சையா நம்ம தலைவருக்கு போன் பண்ணி, சொல்லி அழுதுச்சு. சில மாசங்களுக்கு முன்னாடிதான் கோவா வரைக்கும்  டீ சாப்பிடுறதுக்காக ரெண்டு பேரும் நாலு நாளைக்கு போயிருந்தாங்க. பலானது தாண்டி பல விஷயங்களைப் பேசி ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. அந்த சிநேகிதம்தான் இது. 

என்ன நினைச்சாரோ தெரியலை, ‘பேசாம என் சொந்த ஊருக்கு கெளம்பி வா. கொஞ்ச நாள் ரிலாக்ஸ்ட் பண்ணிட்டுப் போட்!’ன்னு இவர் சொல்ல, மறு பேச்சு வைக்காமல் கிளம்பி வந்து இறங்கிடுச்சு. எர்போர்ட்ல அம்மணியை பிக் - அப் பண்ணிட்டு நேரா தலைவரோட பண்ணை வீட்டுல கொண்டு போயி இறக்குனாங்க.

அடுத்த நாலஞ்சு மணி நேரத்துல தலைவரும் தலைநகர்ல இருந்து பறந்து வந்து பண்ணை வீட்டில் ஐக்கியமாயிட்டாரு. கவலை மறப்போம்! துயரம் மறப்போம்! தூக்கம் மறப்போம்!-ன்னு ரெண்டு பேரும் ராப்பகலா அடிச்ச கூத்து இருக்குதே....சான்ஸே இல்லை ரகம். 

Ex Minister relationship with Nurse actress

தலைவி நடிச்ச படங்களிலேயே தலைவருக்கு ரொம்பப் பிடிச்சது அந்த கெத்தான ‘நர்ஸ்’ வேஷ படம்தான். பண்ணை வீட்டுல பர்ஷனலா இருக்கிறப்ப அந்தப் படத்தோட டயலாக்கை பேசச்சொல்லி ரசிக்கிறதுதான் அண்ணனோட மெயின் பொழுதுபோக்கு. ஒரு கட்டத்துல அந்தப் பட காஸ்ட்யூம் மாதிரியே நர்ஸ் சேலை வாங்கிக் கொடுத்து கட்டச் சொல்லி, தனக்காக நடிக்கச் சொன்னாரு. தன்னை குயின் மாதிரி நடத்துனதாலே கொஞ்சம் கூட பந்தா காட்டாம, இறங்கி நடிச்சுது பொண்ணு. 

அண்ணனோட அல்லக்கைகள் கீழே உட்கார்ந்து கைதட்டி ‘அண்ணி சூப்பருங்கோ!’ என்று பிகிலடித்தபோது நடிகைக்கும், தலைவருக்கும் உடல் சிலிர்த்துப் போச்சு. பொதுவாக ‘அந்த’ மாதிரி விஷயங்களில் ஓவராக டீஸண்டு பார்க்கும் அம்மணி, இறுக்கிக் கட்டி வெச்ச தன்னுடையை எல்லா கொள்கைகளையும் தலைவருக்காக தளர்த்திவிட்டு செம்ம ஓப்பனாக கம்பெனி கொடுத்தார். 

அதிகபடம் ஒரு வாரம் தங்கி ரிலாக்ஸ்ட் செய்யலாமுன்னு வந்த பொண்ணு, கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் டேரா போட்டுவிட்டது. அந்த பண்ணைவீட்டின் காவல்காரர் பேத்தி வரைக்கும் இவருக்கு பழக்கமாகிவிட்டார்கள். ஆனால் யாரும் இவரைப் பற்றியோ, இவர் இங்கிருப்பது பற்றியோ வெளியில் வாயே திறக்கவில்லை. அதுதான் ‘ராஜ விசுவாசம்’.

இதற்கிடையில் கமிட் ஆன படங்களுக்கு நடிக்க வரவில்லை என்று சினிமா கம்பெனிகளும், தன் அக்கா மகளை காணவில்லை என்று சின்னம்மாவும் புகார் கிளப்ப,  ’எங்கே அந்த பொண்ணு? எங்கே அந்த பொண்ணு?’ என்று தமிழ்நாடே பரபரப்பானது. சக அமைச்சர்கள் இந்த விவகாரம் பற்றி பேசியப்ப கூட நம்ம தலைவர் கேட்டும் கேட்காததும் போல இருந்துவிட்டார். 

இதற்கிடையில் பண்ணை வீட்டில் ஒரு நாள் கரண்ட் போர்டில் ஃபியூஸ் போயிவிட்டது. அதை சரி பண்ணுவதற்காக லைட் கம்பத்தின் மேல் ஏறிய லைன் மேனின் கண்ணில், வராண்டாவில் வலம் வந்து கொண்டிருந்த நம்ம அம்மணி பட்டுவிட்டார். லெவலாக தன் மொபைலில் போட்டோ எடுத்துவிட்ட லைன் மேன், அதை தன் நண்பர்கள் ஏரியாவில் காண்பிக்க ஊரே பற்றிக் கொண்டது.

Ex Minister relationship with Nurse actress

அதன் பிறகு இளவட்டங்கள் பைக்கிலும், காரிலுமாக அந்த பண்ணை வீட்டுப் பக்கம் ரவுண்டு வர ஆரம்பிக்க, விஷயத்தை கேள்விப்பட்டு தலைவருக்கு ரத்தம் கொதித்துவிட்டது. எக்குத்தப்பாக நடந்த என்கொயரியில் லைன் மேன் சிக்க, அவருக்கு பியூஸை பிடுங்கிவிட்டார்கள் அண்ணனின் அல்லைக்கைகள். கையோடு மொபைலையும் பிடுங்கி சிதைத்துவிட்டார்கள். வேறு யாருக்கும் அந்த போட்டோவை அவர் அனுப்பவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதை விட செம்ம காஸ்ட்லி மொபைல் ஒன்றை வாங்கி கொடுத்து வாயை மூடிவிட்டார்கள். 
இருந்தாலும் அம்மணி இங்கிருக்கும் விவகாரம் மீடியா காதுக்கு போய்விட்டால் மீளமுடியாது என்று முடிவெடுத்து, பொண்ணை ‘பேக் அப் ஆகுமா’ என்று சொல்லிவிட்டார் தலைவர். கிளம்பும் அன்று நேரில் வந்த தலைவர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அம்மணியின் அறைக்குள் சென்று ஆசை தீர ஆலோசனை நடத்தினார். 

காதும் காதும் வெச்சாப்ல பொண்ணை கார்லேயே கொண்டு போய் சென்னையில் இறக்கிவிட்டார்கள். அப்புறம் அது ரெகுலராக ஷூட்டிங் போக ஆரம்பிக்க நிலைமை சகஜமாகிவிட்டது. 

இப்போது அண்ணன் மாஜியாக இருந்தாலும் அதிகாரத்தோடுதான் இருக்கிறார். தலைவிக்கு மார்க்கெட் சரியவுமில்லை ஓவராய் நிமிரவுமில்லை. ஆனாலும் இருவரும் அதே பண்ணை வீட்டில் வருஷத்துக்கு நாலு முறையாவது சந்தித்துக் கொள்கிறார்கள். என்ன ஒன்று, பியூஸ் போனால் யூ.பி.எஸ். யூஸ் செய்து கொள்கிறார்கள். அம்மணி கிளம்பும் வரை மின்சார வாரியத்துக்கு மட்டும் போன் போடுவதேயில்லை!
எப்பூடி!

Follow Us:
Download App:
  • android
  • ios