தற்போது 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு நடைபெற்ற இடமான EVP ஸ்டுடியோவில், அடுத்தடுத்து பல விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இதில் உயிர் சேதங்கள் ஏற்பட்டும், சற்றும் கண்டு கொள்ளாத நிர்வாகம், முதலுதவி சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்து தராமல் அஜாகிரதை மிகுந்த நிர்வாகமாக உள்ளது. 

இந்த விவகாரம் தற்போது தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே  EVP  ஸ்டூடியோ நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக பிரபலங்கள் முதல் தொழிலாளர்கள் வரை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.

குறிப்பாக, இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய FEFSI
தலைவர் ஆர்.கே.செல்வமணி, இதுவரை அங்கு நடந்த விபத்துகளை பட்டியலிட்டு கூறியுள்ளார். மேலும் அவர் பட்டியலிடாத பல விபத்துகளும், பலர் காயமடைவதும் வழக்கமானதாகவே உள்ளது.

நான் மகான் அல்ல, நீர்ப்பறவை, சூது கவ்வும் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்த, நடிகர் அருள்தாஸ். ரஜினிகாந்த்துடன் இணைந்து ’காலா’ படத்தில் பணியாற்றியபோது...  EVP, ஸ்டுடிவில் மும்பை தாராவி செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர் படக்குழுவினர்.

அப்போது ரஜினிகாந்த் முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும் ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. வேகமாக வந்த ஜீப், அருள்தாஸ் மீது மோதியது. இதில் அவரது இடது காலில் ஜீப்பின் டயர் ஏறி இறங்கியது. அவரது 3 விரல்கள் நசுங்கின. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வலியால் துடித்த அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

அதே போல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவிபி பிலிம் சிட்டியில் பிகில் படத்திற்கான செட் அமைக்கும் பணியில ஈடுபட்டிருந்த ஊழியர் செல்வராஜ் என்பவர், 100 அடி உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். மின்சார விளக்கும், செல்வராஜ் தலையில் விழுந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமணையில் தொடர் சிகிச்சையில் இருந்த போதும், நான்கு மாதத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் படப்பிடிப்பு EVP ஸ்டுடியோவில் நடந்த போது ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவர், வேலை செய்துகொண்டிருக்கும் போது, கால் தவறி இரண்டாவது மாடியில் இருந்து கால் தவறி கீழே விருந்து பலியானார்.

இது போன்ற விபத்துகள் ஒரு புறம் நடந்து வந்தாலும், ஸ்டூடியோ உள்ளே இருந்து பெரிய பெரிய வண்டிகள் வெளியே வருவது தெரியாமல், இது வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் செல்வமணி கொடுத்த பேட்டியில் தெரிவித்தார்.

கடைசியாக EVP ஸ்டுடியோவில், இந்தியன் 2 விபத்தால் மூன்று உயிர்கள் பலியாகியுள்ளது. 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே இனியாவது முதலுதவி உபகரணங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்க்காக உள்ளது.