பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் பலரிடமும் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என்றும், அந்த காட்சிகள் வெளியானால் என் வாழ்க்கையே சீரழிந்து விடும் என பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகை கவலை தெரிவித்துள்ளார்.
பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் பலரிடமும் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என்றும், அந்த காட்சிகள் வெளியானால் என் வாழ்க்கையே சீரழிந்து விடும் என பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகை கவலை தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் இருட்டில் தவிக்கிறேன் என்றும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உருக்கமாக கூறப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை நிறைவு செய்ய மேலும் மூன்று மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான காட்சிகள் இதுவரை நீதிமன்றத்தில் இரண்டு முறை பார்க்கப்பட்டுள்ளது. முக்கிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன, தற்போது பல காட்சிகள் நடிகர் திலீப் கைக்கு சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும், அதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறினார். அதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் இனியும் ஒரு நாள் கூட வழக்கு விசாரணை நீட்டிக்க போலீசுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஐந்து மாதங்களுக்கு மேலாக போலீசார் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தியும் திலீப்புக்கு எதிரான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றார், அதைத்தொடர்ந்து நடிகையின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, அதில், பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் பலரிடமும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. ஒருவேளை அந்த காட்சிகள் வெளியானால் எனது வாழ்க்கையே மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்படும்.

எனது எதிர்காலம் சீரழிந்து விடும், கடந்த ஐந்து வருடங்களாக நான் இருட்டில் தவித்து வருகிறேன். எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சமூகத்தில் நீ கிடைக்காத சூழ்நிலை தான் இருந்து வருகிறது. ஒருவேளை விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ள ஆதாரங்களின் முறைகேடு நடந்தால் அது மிகவும் ஆபத்தானது. எனது வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும், இதற்காக முறையாக விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை வழங்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
