Even in the unexpected situation the good political leader should decide fast - kasthoori
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த குழப்பமான அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கலாய்த்துள்ளார்.
தனது ரசிகர்களை கடந்த ஐந்து நாள்களாக சென்னையில் ரஜினிகாந்த் சந்தித்தார். அவர் எது பேசினாலும் அரசியல் வாடை இருக்கிறதா? என்று இந்த தேசமே உற்று நோக்குகிறது.
5-வது நாளாக ரசிகர்களை சந்திக்கும் முன்பு ரஜினிகாந்த் பேசுகையில், ''நான் அரசியல் பேசினாலே எதிர்ப்பு வருகிறது. நான் பச்சை தமிழன். உங்களால்தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். போர் வந்தால், சந்திக்க தயாராக உள்ளேன்'' என்று மீண்டும் வெளிப்படையாக பேசாமல் டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் வைத்தார்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்தை பிரபல நடிகை கஸ்தூரி மறைமுகமாக கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில், "நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா? மாட்டேனா? என்று வருடக்கணக்கில் யோசிப்பவர என்ற ஒரு பதிவும், “'போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது'' #அக்கப்போர் #toolate என்ற ஒரு பதிவும் போட்டுள்ளார்.
