தான் ஐயப்பன் கோவிலுக்கு சென்றதில்லை என்பதால், என்னால் பக்தர்களின் உணர்வுகள் குறித்து கருத்து கூற முடியாது என கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். 

அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து  இந்து அல்லாத மற்ற மத பெண்களில் சிலர் மட்டும் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து  வந்தனர். இருந்தாலும், இதற்கு எதிராக கேராள முழுவதும் பெருவாரியான  பகுதிகளில் பெருத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையில் ரெஹானா பாத்திமா என்ற பெண், இருமுடி எடுத்துக்கொண்டு சபரிமலைக்கு சென்றார். அவருக்கு  பலத்த  எதிர்ப்பு கிளம்பியது.பின்னர் அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பி விடப்பட்டர்.

இந்த தருணத்தில்,சபரிமலை குறித்து கருத்து தெரிவித்தார். அதில், தான் ஐயப்பன் கோவிலுக்கு செல்லாததால் பக்தர்களின் உணர்வுகள் குறித்து  கருத்து கூற முடியாது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் காங்கிரஸ் உடனான  கூட்டணி குறித்து கேள்வி எழுந்தபோது, தற்போது அதற்கான ஐடியா இல்லை என்றும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு முடிவை அறிவிக்கலாம் என கமல் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்னா் கமல்ஹாசனின் நடிப்பு எனக்கு பிடிக்கும், ஆனால் அவருக்கு அரசியல் தெரியாது என துரைமுருகன் தெரிவித்து இருந்தார். இதற்கு பதலடி கொடுக்கும் வகையில்  கமல், "எனக்கு கூட  துரைமுருகனின் நடிப்பு  பிடிக்காது என  சாதுர்த்தியமாக தெரிவித்து உள்ளார்.