Asianet News TamilAsianet News Tamil

ET Official Trailer : சோக்குடா...சூர்யா பட ட்ரைலர் தேதியை சொன்ன சன் பிக்சர்ஸ்..

ET Official Trailer : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது...

ET trailer is releasing date
Author
Chennai, First Published Feb 28, 2022, 1:50 PM IST

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ET trailer is releasing date

தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..அதில் நாயகன் சூர்யாவின் மாஸ் பைட் சீன்ஸ்..மற்றும் வில்லன் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது..மாஸ் பீஜியம் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது...தமிழில் வெளியாகி டீசர் ட்ரெண்டாகிய நிலையில் தற்போது  எதற்கும் துணிந்தவன் தெலுங்கு டீசர் வெளியாகியுள்ளது.. இதில் சூர்யா தனது சொந்த குரலில் மாஸ் பஞ்ச் பேசியுள்ளார்... 

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 2-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது...

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios