நடிகர் நடிகைகள் அவர்களுடைய காதல் பற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்தாமல் இருந்தாலும், எப்படியோ அவர்களுடைய காதல் கதை வெளியே கசிந்துவிடும். அனால் நடிகர் நோயாலும் தெலுங்கு நடிகை எஸ்தரும் தங்களுடைய காதல் பற்றி மூச்சு கூட விடாமல் தற்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

‘நான் ஈ’ படத்தில் நடிகர் நானிக்கு நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர்,  நடிகர் நோயால். இவர் தமிழில் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எஸ்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருமே தமிழை விட, தெலுங்கிலும், கன்னடத்திலும் அதிகம் பிரபலமானவர்கள். 

நடிகை எஸ்தரும், ‘நோயாலும்' கடந்த சில வருடங்களாகவே தங்களுடைய காதலை வெளியுலகிற்கு தெரியப்படுத்தாமல் காதலித்து வந்தனர். 

இந்நிலையில், இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் இவர்களுடைய திருமணம் நேற்று முன்தினம் மங்களூரில் உள்ள சர்ச் ஒன்றில் மிகவும் சிம்பிள்ளாக நடந்தது. இவரும் பிரபலங்களாக இருந்த போதிலும் இவர்கள் திருமணத்தில் நடிகர் நடிகைகள் என யாருக்கும் அழைப்பு விடுக்க வில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் , நோயாலும் - எஸ்தருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.