erumai sani harrija married her lover
எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் யூடியூப்பை தாண்டி அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் ‘எருமை சாணி’ டீமான விஜய், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ புகழ் கோபி – சுதாகர், ஷாரா, அகஸ்டின் என யூ-டியூபில் ஃபேமஸானவர்கள் நடிக்கவுள்ளனர். கௌசிக் கிரீஸ் இசையமைக்கவுள்ள இதற்கு ஜோஸ்வா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படம் வெளியாகாத நிலையில், ஹரிஜா தன்னுடைய திருமண சாப்பாட்டையே போட்டு விட்டார். ஹரிஜாவுக்கும் அவரது காதலர் அமர் என்பவருக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடைய திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இவரின் திருமண புகைப்படம் இதோ...
