சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களை எப்படி ரசிகர்கள் ரசிக்கின்றனரோ, அதே போல்... யூடியூப் மூலம் தன்னுடைய திறமையை  வெளிப்படுத்தி, ரசிகர்களை கவரும் இணையதள ஊடக நடிகர்களையும், அவர்களுடைய திறமையும் மதித்து அவர்களை உச்சாக படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். 

அந்த வகையில், எருமை சாணி விஜய் மற்றும் ஹரிஜா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இணையதள ஊடகம் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த விஜய்க்கு, திரை பட வாய்ப்புகளும் தானாக வந்தது.

அந்த வகையில் ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தின் கதையை கேட்டதுமே, நடிகர் அருள்நிதி ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.