கடந்த 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்து ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிடுகிறது.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. 

இதனால் படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.ஏற்கெனவே, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக, படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக வெளியான மறுவார்த்தை பாடல், காதலர்களின் ஆந்தம் என சொல்லும் அளவுக்கு வைரல் ஹிட்டானது. 

பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்தப் பாடலை பிரபல சென்சேஷன் சிங்கரும், இசையமைப்பாளருமான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி நீண்ட காலமாகியும் இன்றும் அனைவரின் ஃபேவரைட்டாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு பலரது மனம் கவர்ந்த 'மறுவார்த்தை பேசாதே' என்ற ரொமான்டிக் பாடல் வீடியோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

அதன் ஒருபகுதியாக, இந்தப் பாடலின் 20 நொடி ப்ரமோ வீடியோ வரும் நவம்பவர் 23ம் தேதி மாலை 7 மணிக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பட்டிதொட்டியெங்கும் 'மறுவார்த்தை பேசாதே' பாடல் ஒலித்த நிலையில், இந்த ப்ரமோ வீடியோ ரசிகர்களுக்கு சின்ன ட்ரீட்டாக இருக்கும். எனினும், பாடலின் முழு வீடியோவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.