நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் அமைப்பை சேர்ந்த பலர் தொடந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

பெண் தேடிய ஆர்யா:

கிட்ட தட்ட 40வயதை தொடவுள்ள ஆர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய காதலும் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் தனக்கு ஏற்ற பெண்ணை 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சி மூலம் தேர்வு செய்ய முடிவு செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள 70,000 பெண்கள் தங்களுடைய விருப்பத்தை ஆன்லைன் மூலம் தெரிவித்த நிலையில் இவர்களில் 16 பெண்களை திருமணம் செய்ய தேர்வு செய்தார் நடிகர் ஆர்யா. 

எலிமினேட் செய்யப்பட்ட பெண்கள்:

இப்படி தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் போட்டிகள் மற்றும் ஆர்யாவின் கருத்தும் அவர்களுடைய கருத்தும் பொருந்துகிறதா, ரசனை ஒற்றுப்போகிறதா என பல கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு வாரத்திற்கு இரண்டு பெண்கள் எலிமினேட் செய்யப்படுகின்றனர். 

அந்த வகையில் இதுவரை நான்கு பெண்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

போட்டியாளர் சுசானா:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள பல நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணும் உள்ளார். 

மேலும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் செட்டில் ஆகி ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து ஆன பெண் ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொன்டுள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகனும் உள்ளார். ஆரம்பத்தில் இருந்து அழகாலும், அமைதியான குணத்தாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவரை பலர் பார்த்திருக்க முடியும்.  ஆனால் இவருடைய மகனை பார்க்க வாய்ப்பில்லை. தற்போது இவருடைய மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

சுசானா திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது தெரிந்தும் அதனை பெரிதாக எடுதுக்கொள்ளத ஆர்யா. இவரை திருமணம் செய்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.