engaveetu mappillai aparnathi acting advertisement
பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே, ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இந்த நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பு முனையோடு முடிவடைந்தாலும், இதில் கலந்துக்கொண்டவர்களுக்கு விளம்பரம் மாடலாக நடிக்க வாய்புகள் வருகிறதாம்.
அந்த வகையில் நம்ப கும்பகோணம் பெண்ணுக்கு, பலர் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்புகளை வாரிகொண்டுக்க முன் வந்துள்ளனர். சிலர் இவரை கதாநாயகியாக வைத்து திரைப்படம் எடுக்கவும் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது வரை திரைப்படத்தில் நடிக்க ஓகே சொல்லாத அபர்ணதி, மாடலிங் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், விரைவில் இவர் பிரபல நகைக்கடை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இதே போல் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆபர்ணதியை அணுகி வருவதாகவும், இதனால் இவரை விரைவில் ஏதேனும் விளம்பரங்களில் ரசிகர்கள் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
மற்ற போட்டியாளர்களை விட அபர்ணதிக்கு மட்டும் இப்படி பல வாய்புகள் குவிந்து வருவது, இவர் இந்த நிகழ்ச்சியில் சற்றும், பொய்யாக நடிக்காமல் உண்மையான குணத்தோடு நடந்துக்கொண்டது தான் என கூறப்படுகிறது.
ஆர்யாவல் ரீஜெக்ட் செய்யப்பட்ட இவர், மீண்டும் ஆர்யாவுடன் வருங்காலத்தில் இணைவாரா... மாட்டாரா...? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
