நடிகர் ஆர்யா திருமணத்திற்காக பெண் தேடும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி பெண்களை அவமதிப்பது போல் உள்ளது என்று பலர் எதிர்ப்புகள் தெரிவித்து வருவதால் முடிந்த வரை சீக்கிரம் இந்த நிகழ்சியை முடிக்க நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

ஸ்ரேயா:

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்துக்கொண்டனர். வாரத்திற்கு இரண்டு பெண்கள் என நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த மூன்று வாரங்களாக ஒரு வாரம் ஒரு போட்டியாளர் என வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சம் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ரேயா என்பவர் வெளியேற்றப்பட்டார். இவர் இந்த் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடி இரண்டு முறை டோக்கன் ஆப் லவ் வாங்கியவர். 

தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து வந்த இவரை ஏதோ ஒரு சில காரணங்களை கூறி வெளியேற்றி உள்ளார் ஆர்யா. இந்த நிகழ்சியை விட்டு வெளியேறியதும், ஸ்ரேயா சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 

இதில் நான் "இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது ஆர்யாவுக்காக அல்ல, அவரை கவர வேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படும் என்பதால் தான். இதனால் எனக்கு சினிமா வாய்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 
மேலும் விரைவில் இந்த நிகழ்சியை பற்றிய பல தகவல்களை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்