வெளியானது புகைப்படம் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த புகைப்படம்..! 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளார். பிரியங்கா சோப்ராவை விட இவர் 11 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக நியூயார்க்கில் வலம் வந்த இவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்ட பின் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் இன்று நடைப்பெற்றது. அதற்காக வாங்கப்பட்ட இந்த மோதிரம் 2.1 கோடி என கூறப்படுகிறது. இவர்களுக்கான நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது வெளியாகி  உள்ளது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.