எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது பலராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள எந்த பெண்ணை திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

சதீஷ்:

இந்நிலையில் பல முன்னணி ஹீரோக்களுடன் வரும் காமெடின் நண்பன் சதீஷ், ஆர்யா பெண் தேடும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் வரும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் ஸ்டேட்டஸ் ஒன்றையும் பதிவிட்டார். 

அதில் 'டார்லிங், நீங்க சும்மாவே இதை தான் செய்வீங்க, இப்போ இதை செய்ய காசு வேற கொடுக்குறாங்க என சற்று கவலையோடு கூறி இருந்தார்'.

உடனே இதற்க்கு பதில் கொடுக்கும் விதமாக ஆர்யா 'ப்ரோ அடுத்த சீசனுக்கு உங்க பெயரை தான் பரிந்துரை செய்துள்ளதாகவும் அதனால் இப்பவே தயாராக ஆரம்பியுங்கள் என கூறினார். 

இவர்கள் பேசுவதை பார்த்து திடீர் என்ட்ரி கொடுத்த வரலட்சுமி சரத்குமார், 'எத்தனை பேரை நீ ரெகமென்ட் பண்ணுவ என்று கூறி ஆர்யாவையே கலாய்த்து விட்டு சென்று விட்டார்.