கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் பல்வேறு தடங்கல்களை தாண்டி படப்பிடிப்பு நிறைவடைந்த போதிலும், சில பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே போனது.

கடந்த வருடமே இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது, அதற்கு ஏற்ற போல்...  தயாரிப்பு தரப்பும் பல்வேறு ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியபோதும்...  படம் ரிலீஸ் பிரச்சினை மற்றும் ஓய்ந்த பாடில்லை.  

இந்நிலையில் முதல் முறையாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பேசியுள்ளார், இயக்குநர் கௌதம் மேனன். இதுவரை பல ரிலீஸ் தேதிகள் வெளிவந்த போதிலும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்த  கௌதம் மேனன், முதல் முறையாக அவரே ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் கண்டிப்பாக குறிப்பிட்ட நாள் அன்று படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

இது குறித்து தெரிவித்துள்ள கௌதம் மேனன், நவம்பர் 15ஆம் தேதி 'எனை நோக்கி பாயும் தோட்டா' கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என்றும், இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கி விட்டதாகவும் அறிவித்துள்ளார். நாளை மறுநாள் 'அசுரன்' படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது தனுஷின் அடுத்த படம் ரிலீஸ் தேதியும் உறுதியாகியுள்ளது தனுஷ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

தமிழில் நடிகை மேகா ஆகாஷுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். கௌதம் மேனன் தற்போது மிகவும் அமைதியாக 'ஜோஷ்வா அதிகாரம் ஒன்று' என்கிற படத்தின் படப்பிடிப்பையும் துவங்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் 'பப்பி' படத்தின் ஹீரோ கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.