இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த, "மதராசப்பட்டினம்"  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், லண்டன் நடிகை  எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் கமிட் ஆகி நடித்தார். மேலும் சமீபத்தில் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த 2 . 0  படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளை தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் சூப்பர் கேர்ள் என்கிற சீரிசில் நடித்து வருகிறார் எமி. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றுள்ள எமி, இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டில் காதலருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக லிப் டூ லிப் கிஸ் கொடுத்துள்ளார். இதனை புகைப்படமாகவும் எடுத்து இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பல ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது.