நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனின் ‘சர்கார்’ படம் மூலம் பிரபலமான உங்கள் வாக்கினை வேறு எவராவது பதிவு செய்தால் பின்பு 49P  கீழ் புகார் அளிக்கலாம் என்ற தகவலை  தேர்தல் ஆணையம் முதன் முறையாக  விளம்பரப்படுத்தத் துவங்கியிருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

முருகதாஸ் - விஜய் கூட்டணியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தரராமசாமி என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தார்.

இலவசங்கள் வேண்டாம் என்று பேசிய இந்தப் படம் அரசியல் கட்சியினரின் எதிர்ப்புக்குள்ளாகியது. அதேசமயத்தில் மக்கள் வாக்களிப்பதன் அவசியத்தையும் இந்தப் படம் பேசியிருந்தது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு விரல் புரட்சி என்ற 49P பிரபலமானது.

தற்போது சர்கார் பட பாணியில் 49P பிரிவை விழிப்புணர்வு பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதில் உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49P பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களை அதிகமாக ஷேர் செய்துவரும் விஜய் ரசிகர்கள் ’ ஞாபகம் வருகிறதா ..!! 😎இது தான் நம்ம சர்க்கார்  #49P #sarkar @actorvijay
 @ARMurugadoss @sunpictures#Elections2019’ என்று வலைதளங்களில் பரப்பிவருகிறார்கள்.