கன்னடத்தில் பிரபல நடிகராக இருக்கும் துனியா விஜயின் இரண்டாவது மனைவியை தாக்கிய முதல் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் துனியா விஜய் இவர் சங்கர் ஐபிஎஸ் மாஸ்தி குடி, ரிங் ரோடு துனியா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். துணியா படம் வாயிலாகவே இவருக்கு துனியா விஜய் என்ற பெயர் கிடைத்தது. இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.

  

முதல் மனைவி பெயர் நாகரத்னா. இரண்டாவது மனைவி கீர்த்தி கவுடா. தற்போது துனியா விஜய் கீர்த்தி கவுடாவுடன் தான் வசித்து வருகிறார். ஆனால் நாகரத்னாவுக்குப் பிறந்த குழந்தை மோனிகாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு துனியா விஜய் கேட்டதால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது,  

இந்த நிலையில் தனது முந்தைய உடற்பயிற்சியாளரை தாக்கிய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதை அடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி பெங்களூருவில் உள்ள வீட்டில் தங்கி இருந்த கீர்த்தி கவுடா வை, துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா, செருப்பால் அடித்தார். இந்தக் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் பெங்களூரு காவல் நிலையத்தில் கீர்த்தி புகார் அளித்தார். 

இதேபோல் நாகரத்னாவும், தன்னை கீர்த்தி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் சிசிடிவி காட்சிகளை கீர்த்தி ஆதாரமாக தாக்கல் செய்ததால் நாகரத்னாவைக் கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த நாகரத்னா தனது மகளை கதவைத் திறக்கச் சொல்லியுள்ளார். அவரது மகள் போலீசிடம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறி தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார் நாகரத்னா.

 

இந்தப் பிரச்சனையை அறிந்த துனியா விஜய், தனது இரண்டாவது மனைவி கீர்த்தியுடன் காவல்நிலையம் சென்று இந்தப் பிரச்சனையில் மகளை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதைக் காவல்துறையினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள நாகரத்னாவைத் தேடி வருகின்றனர். சோதனை மேல் சோதனையால் துனியா விஜய் மனமுடைந்து காணப்படுவதாக கன்னட திரைஉலகினர் பேசி வருகின்றனர்.