Kamalhaasan 234: கமல்ஹாசனின் 234 படத்தில் இணைந்த பிரபல இளம் ஹீரோ! அதிகார பூர்வமாக வெளியான அறிவிப்பு.!
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள '234' படத்தில் இணைந்துள்ள நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கமல் - மணிரத்னம் கூட்டணியில், கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் கமல்ஹாசனுக்கு பெற்று தந்தது. இதை தவிர சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை வடிவமைப்பு என மொத்தம் 4 தேசிய விருதுகளை அள்ளியது.
இந்த திரைப்படம் வெளியாகி, சுமார் 36 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கமல் - மணிரத்னம் இருவரும் ஒன்றாக கைகோர்த்துள்ளனர். கமல்ஹாசனின் 234-ஆவது படமாக உருவாகும் இந்த படம் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. இன்று மாலை கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் டைட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை தொடர்ந்து இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பும் வெளியாக துவங்கியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி, பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் கமல்ஹாசனின் 234-ஆவது படத்தில் இணைந்துள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து, மணிரத்னம் இயக்கும் படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.