dulquer acting a new movie is starts on December

வித்தியாசமான கதைக் களத்தோடு நிறைய படங்களில் நடித்தாலும் துல்கரின் படங்கள் அதிகளவு வரவேற்பை பெறுவதில்லை. அதனால் இந்தமுறை ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்கு தயாராகிறார் துல்கர்.

லால்ஜோஸ் டைரக்சனில் அவர் நடிக்கவுள்ள படத்திற்கு 'ஒரு பயங்கர காமுகன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

வரும் டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் துல்கர். கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவாக இருக்கிறது இந்தப்படம்.

ஏற்கனவே 'விக்ரமாதித்யன்' படம் மூலமாக நூறுநாள் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி 'ஒரு பயங்கர காமுகன்' படத்திலும் அந்த வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.