கன்னட திரையுலகில் இளம் பாடகியான சுஷ்மிதா என்பவருக்கும், பெங்களூருவில் கார் ஷோரூம் மேனேஜராக பணியாற்றி வந்த சரத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு இளம் தம்பதி பெங்களூருவில் உள்ள குமாரசாமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், கோபித்துக் கொண்ட சுஷ்மிதா பெங்களூரு நாகர்பாவி பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்குள் வந்துள்ளார். 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

அன்று அம்மா மீனாட்சி மற்றும் தம்பி சச்சினுடன் சாப்பிட்டு விட்டு, இரவு தூங்க போன சுஷ்மிதா காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலை முடிவு செய்த சுஷ்மிதா, அதற்கு முன்னதாகவே தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாய் மற்றும் தம்பிக்கு வாட்ஸ் அப் மெசெஜ் மூலம் அனுப்பியுள்ளார். 

அதில் கணவரின் பெரியம்மா தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்லும் படி அடிக்கடி துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவர் சரத், அவரது பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் தான் என் மரணத்திற்கு காரணம். நான் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் மனம் இறங்கவில்லை. அவர்களை சும்மா விடாதீர்கள் அம்மா என்று உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: இந்த கேவலமான போட்டோவுக்கு முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்... பிகினியில் கடுப்பேற்றிய மீரா மிதுன்...!

சுஷ்மிதாவின் கடிதத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான சரத், அவரது பெரியம்மா மற்றும் சகோதரியை தேடி வருகின்றனர்.