கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.குறிப்பாக திரை துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வறுமையில் தவிக்கும் பலரும் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மாற்று தொழிலை செய்து வருகின்றனர். அன்றாட பிழைப்பிற்காக நம்பியிருந்த சினிமா தொழிலும் கைவிட, எவ்வித உதவியும் கிடைக்காமல் திண்டாடும்  சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட துணை நடிகர்கள் பலரும் காய்கறி, பழம், கருவாரு என வீதி வீதியாக சென்று விற்றுவருதை நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த இயக்குநரான ஆனந்த் என்பவர் கொரோனாவால் முற்றிலும் வருமானம் இழந்து மளிகை கடை திறந்துள்ளார். தனது நண்பருக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் அன்றாட வருமானத்திற்கு வழி தேடியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை நம்பி வந்த ஆனந்த், கொரோனா பிரச்சனைக்கு பிறகு அனைத்தும் சரியாகிவிட்டால் மீண்டும் திரைத்துறைக்கே திரும்பும் எண்ணத்தில் உள்ளாராம்.