Asianet News TamilAsianet News Tamil

தப்பில்ல? இந்த மாதிரி பண்ணலாமா? வைரமுத்து இப்படி மாட்டி விட்டுட்டிங்களே? பகீர் கிளப்பும் கஸ்தூரி

டப்பிங் சங்கத்திலிருந்து பின்னணி பாடகி சின்மயியை நீக்கியதனால், வைரமுத்து குற்றவாளி என அவர்களே வாக்குமூலம் தருகிறார்களா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Dubbing unit wrong  decision
Author
Chennai, First Published Nov 26, 2018, 4:16 PM IST

அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கம் சார்பில் கட்டுநர் தின விழா, கோவை கலிங்க நாயக்கன்பாளையம் ஆர்.ஆர்.தோரண மஹாலில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்க தலைவர் புகழேந்தி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நடிகை கஸ்தூரி கலந்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, “டெல்டா மாவட்டங்களில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடந்த 2 நாட்களாக நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினேன். அங்கு மக்கள் அனைத்தையும் இழந்து தெருக்களில் நிற்கின்றனர்.

சாலையில் சுலபமாக செல்லக்கூடிய இடங்களுக்கு மட்டும் சென்று நிவாரணப் பொருட்களை கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், வாகன வசதி இல்லாத இடங்களுக்கு சென்று பொருட்களை தர வேண்டும். நிறைய கிராமங்களுக்கு இதுவரையில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் இறுதியாகத்தான் சென்று அடைகின்றன.

இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை வர உள்ளது. இதை முன்னிட்டு, மிகவும் குறைவான விலையில் குடிநீர் பாட்டில்களை வாங்கி ஒரு பெரிய கட்சி அலுவலகத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் பொன் விளையும் பூமியான டெல்டா மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்துவிடும். இதை அப்புறப்படுத்த அரசு தனி திட்டம் வகுக்க வேண்டும்.

நிறைய ஆர்வலர்கள் முன் வந்து நிவாரணப் பொருட்களை கொடுத்து வருகின்றனர். அங்கு உள்ள மக்களின் தேவையை அறிந்து பொருட்களை கொடுத்தால் நல்லது. தார்பாய், மெழுகுவர்த்தி, போர்வைகள், பாய்கள், கால்மிதியடி போன்றவைதான் அவர்களின் தற்போதைய தேவை.

அரசு சற்று மெதுவாக இயங்குவதால், வேகமாக இருக்கும் சிலர் வெளியில் தெரிகிறார்கள். இந்த அரசுக்குக் கட்டுப்பட்ட சாதாரண தமிழச்சியாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன்” என்றார்.

மேலும், டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசும் போது, “டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்கியது தவறு. அப்படியானால் வைரமுத்து குற்றவாளி என அவர்களே வாக்குமூலம் தருகிறார்களா? சின்மயியை நீக்கியது முட்டாள் தனம். வைரமுத்து மீது மதிப்பும் மரியாதையும் நான் வைத்து உள்ளேன். நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்கிறேன் என்றதும் முதலில் எனக்குப் பாராட்டும் உதவியும் செய்தவர் வைரமுத்து” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios