Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீதேவி உடலை கொடுக்க முடியாது….அதிர்ச்சி கொடுக்கும்  துபாய்  அரசு  வழக்கறிஞர் !!

dubai govt denied to give sri devi body
dubai govt denied to give sri devi body
Author
First Published Feb 27, 2018, 1:54 PM IST


நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து முழுமையான விசாரணை  முடியும் வரையில் அவரது உடலை ஒப்படைக்க முடியாது என துபாய் அரசு கடுமையாக தெரிவித்துள்ளது. அவரது சாவில் மர்மம் இருப்பதால் அனைத்துத் தரப்பினரையும் விசாரிக்க  வேண்டும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து  லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தனது கணவரின் உறவினர் வீட்டு திருமணத்துக்காக துபாய் சென்ற அவர் பாத்ரூமில் உள்ள  பாத் டப்பில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் நடிகை ஸ்ரீதேவி குடிபோதையில் இருந்தாகவும் கூறப்படுகிறது.

dubai govt denied to give sri devi body

முதலில் அதிதீவிர மாரடைப்பால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வேறு விதமாக வந்தது. இது தொடர்பாக அவரது கணவரிடம் நடத்தப்பட் விசாரணையில் போலீசார் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதற்கு முன் துபாய் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

dubai govt denied to give sri devi body

இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதற்கு முன் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதுவரை உடலை ஒப்படைக்க முடியாது என்று துபாய் அரசு வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

துபாய் போலீஸ் இந்த வழக்கை பொது வழக்காக மாற்றியுள்ளது என்றும் வழக்கமாக இது போன்ற வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படுகிறது என்றும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.

https://pbs.twimg.com/profile_images/948777394667687936/1Q4cscrP_normal.jpgDubai Policeشرطة دبي

✔@DubaiPoliceHQ

Replying to @DubaiPoliceHQ

#DubaiPolice has transferred the case to #Dubai Public Prosecution, which will carry out regular legal procedures followed in such cases.

2/2

5:29 PM - Feb 26, 2018

இது தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் இன்று அல்லது நாளைக்குள் முடிக்கப்பட்டு விடும் என்றும் துபாய் அரசு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios