நூலிழையில் தப்பிப் பிழைத்த துருவ் விக்ரம்...எப்படி இருக்கு ‘ஆதித்ய வர்மா?’...
மங்களூரு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் துருவ் தனது வகுப்புத் தோழி பனிதாவை கண்டதும் காதல் கொள்கிறார். அடுத்து முத்த மழையாகப் பொழிந்துகொள்ளும் இருவரும் கணக்கு வழக்கில்லாமல் படுக்கை அறையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். படிப்பு முடிந்து துருவ் பெண் கேட்டுப்போக சாதியைக் காரணம் சொல்லி பனிதாவின் அப்பா மறுக்கிறார்.
ஏகப்பட்ட லிப்லாக் காட்சிகளும்,படுக்கையறைக் காட்சிகளும் இருப்பதால் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘ஆதித்ய வர்மா’குட்ம்பத்துடன் சென்று பார்க்கும் படமாக இல்லையென்றும் ஆனாலும் தனது துறு துறு நடிப்பால் துருவ் விக்ரம் முதல் படத்தில் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கிவிட்டார் என்றும் ரிசல்ட்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தெலுங்கு இயக்குநர் கிரிசாயா இயக்கத்தில் துருவ்,பனிதா சந்த், பிரியா ஆனந்த் நடித்துள்ள ‘ஆதித்ய வர்மா’படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஏற்ல்கனவே தெலுங்கு, இந்தி மொழிகளில் சூப்பர் ஹிட் அடுத்துள்ள இப்படம் தமிழில் அப்படியே அட்டக்காப்பி அடிக்கப்பட்டுள்ளது. மங்களூரு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் துருவ் தனது வகுப்புத் தோழி பனிதாவை கண்டதும் காதல் கொள்கிறார். அடுத்து முத்த மழையாகப் பொழிந்துகொள்ளும் இருவரும் கணக்கு வழக்கில்லாமல் படுக்கை அறையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். படிப்பு முடிந்து துருவ் பெண் கேட்டுப்போக சாதியைக் காரணம் சொல்லி பனிதாவின் அப்பா மறுக்கிறார்.
அந்தக் காதல் தோல்வியால் விரக்தியடைந்து குடிகாரனாக, போதை மருந்துகளுக்கு அடிமையாக மாறி துருவ் அட்ராசிட்டிகள் பண்ணிக்கொண்டிருக்க, ஒரு திடீர் எதிர்பாராத க்ளைமேக்ஸுடன் படம் முடிகிறது. துருவ் அப்பாவின் பேரைக் காப்பாற்றும் ஒரு அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார் என்றாலும் இடைவேளைக்குப் பின்னர் நீளும் காட்சிகளில் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. நாயகி பனிதா சந்த் சில காட்சிகளில் கியூட்...பல காட்சிகளில் வேஸ்ட். இப்போதைக்கு 2 மணி நேரம் 38 நிமிடம் ஓடும் காட்சிகளில் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த 38 நிமிடத்தை மட்டும் வெட்டி எறிந்துவிட்டால் படம் கமர்சியல் ரீதியாகவும் வெற்றியடைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் முதல் நாள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள்.
இப்படம் குறித்த நகைச்சுவை விளம்பரம் ஒன்று இன்று காலை முதல் முகநூல் பக்கங்களில் நடமாடி வருகிறது. ‘நீ தலயா இரு தளபதியா...எங்க குட்டி சீயான் துருவ் படம் வர்றதால கொஞ்ச நாளைக்கு தலைமறைவா இரு...என்னா ஒரு காமெடி சென்ஸ் பாருங்கள்.