நாடகக் காதலுக்கு எதிரான கருத்துக்களுடன் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் திரெளபதி. நாடக காதலை நம்பி ஏமாறும் பெண்களின் குடும்பம் அழிந்து போவதையும், அதற்கு காரணமான வில்லன் கும்பலை நாயகன் பழிவாங்குவதும் தான் கதைக்களம். இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியான போதே பெரும் சர்ச்சைகள் வெடித்தது. 

திரௌபதி படம் தங்கள் சமூகத்திற்கு எதிரானது, படத்தை தடை செய்தே ஆக வேண்டுமென சம்பந்தப்பட்ட சாதி அமைப்பு சார்பில் படத்தை  மத்திய தணிக்கைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தணிக்கை செய்யப்பட்ட திரெளபதி திரைப்படம் 14 இடங்களில் வெட்டப்பட்டது. குறிப்பாக அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல... என்று இளைஞர் ஒருவர் பேசும் வசனத்திற்கு கட் கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் படம் குறித்த மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக பாகுபலி பட காட்சியைக் கொண்டு, இது நாடக காதலுக்கு முடிவு கட்டுவதற்கான அறிகுறி என்று கிரியேட் செய்யப்பட்டுள்ள மீம்ஸ் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. 

அதேபோல் ஜல்லிக்காட்டு காளை ஒன்று நாடக காதல் கும்பலை முட்ட நினைப்பது போன்ற மீம்ஸும் லைக்குகளை குவித்துவருகிறது. இதுபோல திரெளபதி படத்திற்கான ஆதரவு மீம்ஸ்களைப் போலவே, எதிரான மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. 

டீக்கடைக்கார அண்ணே... திரெளபதி படம் ஹிட்டுன்னு சொல்லுங்க.. யார்கிட்ட..? யாரும் கேக்க மாட்டாங்க.. நீயா யாரையாவது கூப்ட்டு சொல்லு.. என ரஜினி முருகன் படத்தில்  சிவகார்த்திகேயன், சூரி காமெடியை வைத்து மரண பங்கம் செய்துள்ளனர். 

படம் செம்ம மொக்கை என்பதை போல வதம் செய்தாள் #திரௌபதி அசுரர்களையா மச்சான்? இல்ல மாமா‌... தியேட்டர்ல படம் பார்க்க வந்தவங்களை மாமா என்ற தேசிங்கு ராஜா படத்தில் சூரி காமெடியை வைத்து தயாரித்த மீம்ஸும் சக்கைபோடு போடுகிறது.