கன்னட திரையுலகில் பகீர் கிளப்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திரிவேதி உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட்டிலும் பரபரப்பு கிளப்பி வரும் இந்த வழக்கில் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் போதை தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்​
.


இந்நிலையில் கடந்த 4ம் தேதி பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ராகினிக்கு தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சஞ்சனா  கல்ராணியும், ராகினியும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சூடுபிடித்துள்ளது. 

 

இதையும் படிங்க: படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி காட்டிய பூனம் பஜ்வா... மிரண்டு போன ரசிகர்கள்...!

இதனிடையே இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி பெங்களூரு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் பலரை விசாரிக்க உள்ளதாகவும், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவிக்க கூடாது என்றும் போலீசார் வாதிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.