Asianet News TamilAsianet News Tamil

திரையரங்குகளில் இன்று முட்டைஹல் வெளியாகிறது 'திரிஷ்யம் 2 ' திரைப்படம்..! எங்கு தெரியுமா?

இந்த ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற 'திரிஷ்யம் 2 ' படம் திரையரங்குகளில் இன்று முதல் ரிலீசாகி உள்ளது. இது குறித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

drishyam 2 movie release today UAE, Qatar and Oman countries
Author
Chennai, First Published Jul 1, 2021, 1:48 PM IST

இந்த ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற 'திரிஷ்யம் 2 ' படம் திரையரங்குகளில் இன்று முதல் ரிலீசாகி உள்ளது. இது குறித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘திரிஷ்யம்’ 2 திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது பாகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகசிறந்த எடுத்து காட்டு என 'திரிஷ்யம் 2 ' படத்தை பல சினிமா விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளினர். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்தை ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

drishyam 2 movie release today UAE, Qatar and Oman countries

அதே நேரத்தில் 'திரிஷ்யம் 2 ' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு பதிலாக திரையரங்கில் வெளியாகி இருந்தால், வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்திருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களின் இந்த ஆசையை நிறைவேற்றுவது போல், 'திரிஷ்யம் 2 ' திரைப்படம் வெளிநாடுகளில் இன்று முதல் திரையரங்கில் வெளியாக உள்ளதாக நடிகர் மோகன் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

drishyam 2 movie release today UAE, Qatar and Oman countries

இந்த பதிவில், ஐக்கிய அரபு நாடுகளான எமிரேட், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவித்து,  எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். அரபு நாடுகளில் நடிகர் மோகன் லாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், இன்று முதல் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios