சென்டிமென்டில் தாக்கும்  'திரெளபதி' இயக்குனர்..! கண்கலங்க வைக்கும் காட்சி வெளியீடு..! வீடியோ 

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன், கிரவுடு பண்ட் முறையில் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'திரெளபதி'. இந்தப்படத்தில் தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இந்த வாரம், 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் நாடகக் காதலில் தங்கள் வீட்டு பெண்களை ஏமாற்றி, கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி அதன்மூலம் பணம் பறிப்பதாகவும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப்படத்தை எடுத்துள்ளதாகவும் கூறி அதிரவைத்த இயக்குநர் மோகன். 

மேலும் இந்த படத்தின் ட்ரைலர், மற்றும் அதில் வந்த ஒவ்வொரு  வசனங்களும் பரபரப்பை கிளப்பியது.  குறிப்பாக எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டும் முக்கியம்... மீறி கைய வச்ச கைய வெட்டுவோம்... என நாயகி பேசும் வசனத்தில் மானமும் வீரமும் தெரிந்ததாக. இந்தப்படத்தின் டிரெய்லரை ஒருசாரர் கொண்டாடிய  நிலையில் மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு காட்சியை இன்று 4 மணியளவில் யூடியூபில் வெளியிட உள்ளதாக கூறிய இயக்குனர் மோகன் அதனை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை, அவருடைய கணவர் விட்டு சென்ற பிறகு, அதனை, நாயகன் ரிச்சர்டிடம் கூறி தந்தை கண் கலங்கும் செண்டிமெண்ட் உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதோ...