திரெளபதிக்கு அடுத்து தான் இயக்கவுள்ள படத்தை பற்றிய முக்கியத் தகவலை அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

திரெளபதிக்கு அடுத்து தான் இயக்கவுள்ள படத்தை பற்றிய முக்கியத் தகவலை அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கினார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். இந்த ஆண்டின் முதல் மாபெரும் வெற்றிப் படமாக 'திரெளபதி' அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழகத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை மோகன் ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் ரிச்சர்ட் ரிஷியை வைத்து பழைய டீமுடன் களமிறங்குகிறோம். இது சர்ஜிகல் ஸ்டைரைக் பற்றிய படமாக இருக்கும். விரைவில் இப்படத்தில் பெயர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.