நாடக காதல், ஆவண கொலை, போலி பதிவு திருமணம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சமீபத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'திரௌபதி'. இந்த படத்தை இயக்குனர் மோகன் கிரௌட் பண்டிங் முறையில் இயக்கி இருந்தார்.

ரிஷி ரிச்சர்டு கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ஷீலா நாயகியாக நடித்திருந்தார். மேலும் கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் 10 கோடி லாபத்தை ஈட்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 'திரௌபத படத்தின் இயக்குனர் மோகன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க யாராவது முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கு ஒருவர் திரௌபதி படம் தான் ரூ.10 கோடி லாபம் பார்த்ததே, அதில் இருந்து தாராளமாக ரூ.1 கோடியை கொடுக்கலாமே என கேள்வி எழுப்பினர்.

இதற்கு இயக்குனர் மோகன், 'திரௌபதி' படத்தை தயாரிப்பு விலைக்கு தான் விட்டதாகவும், வந்த பணத்தை இப்படம் உருவாக முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி கொடுத்து விட்டதாகவும்,  மீதி லாபம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களும் போய்விடும் என்றும் அதை நீங்கள் அவர்களிடம் கூட கேட்டு கொள்ளுங்கள் என உருக்கமாக கூறியுள்ளார்.