dora movie loos

சமீப காலமாக ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை விட ஹீரோயின்களை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படம் என்றால் கண்டிப்பாக நன்றாக ஓடிவிடும் என்று பல லட்சம் செலவழித்து அதன் உரிமத்தை கைப்பற்றுகின்றனர் விநியோகிஸ்தர்கள்.

காரணம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா, நானும் ரவுடித்தான் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கின.

முந்தைய படங்களின் வெற்றியை வைத்து நயன்தாராவின் டோரா படமும் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இதனால் படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனராம். மாயா படத்தின் வெற்றியை கண்டு அதிக விலை கொடுத்து டோரா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தற்போது பெரும் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.