கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே அனைத்துவித பட ஷூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டது. இதனால் டி.வி. சீரியல்கள் பெரும் சரிவை சந்தித்தன. 

இதனால் மக்கள் மனதில் பெரும் ஆதரவு பெற்ற பழைய சீரியல்கள் அனைத்தையும் திரும்ப விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. மக்களை மகிழ்விப்பதற்காக 1987ம் ஆண்டு ஒளிப்பரப்பான ராமாயணம் தொடரை தூர்தர்ஷன் மீண்டும் ஒளிபரப்பியது. ராமானந்த் சாகர் எழுதி, தயாரித்த அந்த தொடர் மக்களிடையே மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டது. 

இதையடுத்து தூர்தர்ஷனின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் மளமளவென  அதிகரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் ஏப்ரல் 16ம் தேதி இத்தொடர் இதுவரை செய்த சாதனைகளை எல்லாம் அடித்து நொறுக்கி 7.7 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ள உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் நடித்த நிறைய கலைஞர்கள் தற்போது உயிருடன் இல்லை, இந்த தருணத்தில் ராமாயணம் படைத்த இந்த சாதனை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.