தாய் - தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள்! இளைஞர்களுக்கு நடிகர் ராதாரவி வேண்டுகோள்!
நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதாரவி மிகவும் உருக்கமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனி பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்கள் ராதாரவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது, இங்கே கூடி இருக்கும் என் குடும்பத்தை சார்ந்தவர்களே, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன்.
வீரமங்கை வேலுநாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி! கையில் அம்பு - கேடயம் வைத்து மிரட்டல் போஸ்!
நான் 49 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். 400 படங்களுக்கும் மேல் நடித்திருப்பேன். இருந்தாலும் டேனியல் செய்யும் இந்த நிகழ்வு ஏன் என்பது எனக்கு இன்னும் முழுதாகப் புரியவில்லை. முதலில் என்னை நடிப்புப் பயிற்சிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நான் அவரிடம் கேட்டேன், எதற்காக இதெல்லாம் செய்கிறாய் என்று. அதற்கு அவர், என் தாய் கூட 10 பைசா பிரயோஜனம் இல்லாத வேலையை ஏன் செய்றேன்னு கேக்குறாங்க என்றார்.
சன் டிவி விளம்பரங்களில் பேசும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது. இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள்.
டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கு இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவின் வியாதி அது. யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள்'' என்றார்.