kamalhassan advise

நடிகர் கமல்ஹாசன் விரைவில் பிரபல தொலைகாட்சியில் பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

இந்த நிகழ்ச்சி தமிழில், பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்துக்கொண்ட கமல்ஹாசன் செய்தியார்கள் கேட்ட கேள்விக்கு அசராமல் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர் நான் 21 வயதிலேயே அரசியலுக்கு வந்து விட்டேன், என கூறி ஆச்சர்யபடுதினார். ஆனால் நீங்கள் நினைக்கும் போட்டி போட்டு வென்று வரும் அரசியல் இல்லை. ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் அரசியல் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தற்போதைய சுழலில், யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. இந்த கருத்தை நான் நடிகர்களுக்கு மட்டும் சொல்லவில்லை பொதுவாக அனைவருக்கும் சொல்கிறேன்... மேலும் பகுத்தறிவு உள்ள யாரும் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என கூறிய கமல்ஹாசன். தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என தெரிவித்தார்.

மேலும் அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் இல்லை என்றும் , சேவை செய்வும் தொழில் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்தது தவறு இல்லை.

ஆனால் இந்த போட்டி அரசியலில் நான் இல்லை, வர நினைத்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன் என கூறினார்