ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, கமர்ஷியல் இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். 
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

அவர்களுடன் சதீஷ், பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு, சி.சத்யா இசையமைத்துள்ளார். 


ஏற்கெனவே, 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் டீசர் மற்றும் இசை வெளியான நிலையில், படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதற்காக, அவருக்கு ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த டிரைலர், சமூகவலைதளத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

 இந்த டிரைலரை பார்த்து அப்செட்டான ரசிகர்கள் பலர் , "படத்தை எடுக்க சொன்னால் சீரியலை எடுத்து வெச்சிருக்கீங்களே.." என கலாய்த்து வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல், "நீ பேசாம மியூசிக் போட்ற வேலைய மட்டும் பாரு குமாரு.." என ஜிவி பிரகாசையும் கடுமையாக வாரியுள்ளனர். 

"டிரைலரை பார்த்து ரசிகர்கள் வச்சு செய்ததை விட டிரைலர் தான் ரசிகர்களை வச்சு செய்துள்ளது" போன்ற கமெண்ட்களையும் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு 'ஆயிரம் ஜென்மங்கள்' டிரைலரை,  ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

 படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், டிரைலரையே இப்படி வச்சு செய்யும் ரசிகர்கள், படம் ரிலீசானால் எப்படி செய்வார்களோ என்பதை பொருத்திருந்துதான் பார்க்கணும்.