இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘’விஜய் எப்போதாவது மேடையேறி நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லி இருக்கிறாரா?  நீங்களாகத் தான் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்வது?  விஜய் ஒரு நல்ல நடிகனாக வாழ்த்து கொண்டிருக்கிறார். அவர் மீது ஏன் தேவையில்லாமல் கல்லடித்து கொண்டு இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு படம் ஓடி வீட்டால் போதும். அந்த ஹீரோவை வருங்கால தமிழகமே என நோட்டீஸ் அடிப்பது ரசிகர்களின் வழக்கம். அப்படித்தான் ரசிகர்கள் விஜயை அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கனவு காண்கிறார்கள்.  விஜய் அரசியலுக்கு வந்தால் தனக்கு பொறுப்பு, பதவி கிடைக்கும் என ஆசைப்படுகிறான்.

 

ஏதோ ஒரு தலைவர் தமிழகத்தை ஆள வருவான். ஆனால் அது விஜயா என நான் சொல்ல முடியாது. விஜய் அரசியலுக்கு வருவாரா என்பதை, அவர் மனதில் இருப்பதை என்னால் எப்படிக் கணிக்க முடியும்? பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எந்தத் தகப்பனாலும் கணிக்க முடியாது. 

எனக்கு அண்ணாவை தெரியும் திமுகவை தெரியாது.  எம்.ஜி.ஆரை தெரியாது.  ஒருமுறை நாங்கள்ஜெயலலிதாவை அவரது வீட்டிற்கு போய் சந்திக்கும்போது ஒரு நல்ல விஷயத்தை சொன்னார். அப்போது அவர் சொன்ன ஒரு நல்ல வார்த்தை சொன்னார். தொண்டர்கள் உழைப்பால் நான் முதல்வர் ஆகி விட்டேன். முதல்வர் ஆன பிறகு நான் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவள்’’ என சொன்னார்.  அதைத்தான் எடப்பாடி செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.