சூரியுடன் பைக்கில் பரந்த சிவகார்த்திகேயன்..! பொத்தி வச்ச ரகசியம் வெளியே வந்துடுச்சே..!
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படம் குறித்து, படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த சிவகார்த்திகேயனின் கேரக்டர் குறித்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படம் குறித்து, படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்த சிவகார்த்திகேயனின் கேரக்டர் குறித்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம், ஒரு சில காரணங்களால் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை... ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் உள்ளது. எனினும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார்.
ஒவ்வொரு படத்தை முடித்ததும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வரும் சிவகார்த்திகேயன் தற்போது லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷனும் ஒன்றாக இணைந்து தயாரித்து வரும் 'டான்' என்ற படத்தில் பிஸியாகியுள்ளார். இந்த படத்தைஅட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் தற்போது மும்முரமாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இணைத்துள்ளார். மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவரை தவிர முன்னணி காமெடி நடிகர் சூரி, முனீஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், குக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ் என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த நிலையில்... இந்த படத்தில் இருந்து வெளியான சில புகைப்படங்கள், சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சூரியுடன் பைக்கில் செல்வது போல் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களில் சிவகார்த்திகேயன், தன்னுடைய கழுத்தில் கேமரா மாட்டியுள்ளார். எனவே இந்த படத்தில் போட்டோ கிராபர் அல்லது, பத்திரிக்கையாளர் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என கூறப்படுகிறது. 'டான்' படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.