சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தை ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் ஓடிடியில் வெளியிடமுடியாமல் இருப்பதாகவும் இதனால், திரையரங்கில் வெளியிட முயற்சி நடப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், மீண்டும் ஓடிடியிடமே 'டாக்டர்' படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.  

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தை ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் ஓடிடியில் வெளியிடமுடியாமல் இருப்பதாகவும் இதனால், திரையரங்கில் வெளியிட முயற்சி நடப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், மீண்டும் ஓடிடியிடமே 'டாக்டர்' படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. 

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு so baby பாடல் வெளியாகி மில்லியன்களில் வியூஸ்களை குவித்து லைக்குகளை பெற்று, பலரது ரிங் டோனாக மாறியுள்ளது.

'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் டாக்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. பின்னர் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தேர்தல் சமயம் என்பதால் அப்போது வெளியிடாமல் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.

ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி பரவியதை தொடர்ந்து, தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லை என அறிவித்த படக்குழு, 'டாக்டர்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் முயற்சியில் இறங்கியது. ஆனால் ஓடிடியில் ரிலீஸ் செய்வதிலும் சில பிரச்சனைகள் நிலவி வருவதால், மீண்டும் படத்தை திரையங்கிலேயே வெளியிடும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் மீண்டும் ஓடிடி தளத்திலேயே படத்தை வெளியிட மீண்டும் டாக்டர் படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். தற்போது சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டாலும், இதுவரை திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் தற்போது பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானால் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளதாம். திரையரங்கில் வெளியானாலும், ஓடிடி தளத்தில் வெளியானாலும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் அதுவரை கார்த்திருப்போம்.