கொரோனா பீதி காரணமாக, அணைத்து பட வேலைகளும் முழுமையாக முடங்கியுள்ளது. ஆனால் எது என்ன ஆனாலும், ரசிகர்கள், அவர்களுக்கு விருப்பமான நடிகர்களிடம் தொடர்ந்து பட அப்டேட் குறித்து கேள்வியை எழுப்பி வந்த நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ‘டாக்டர்’  படத்தின் புதிய அப்டேட் இன்று சரியாக 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நிமிட ஜாலி வீடியோ ஒண்றோயும் வெளியிட்டு 'செல்லமா' வரும் தேதியை அறிவித்துள்ளனர்.

இந்த இரண்டு நிமிட வீடியோவில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் ’டாக்டர்’ படத்தின் பாடல் குறித்து வெறித்தனமாக டிஸ்கஸ் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின் அனிருத் சிவா, நெல்சன் கோவப்படுத்த, அனிருத் கோபித்துக் கொண்டு வெளியே செல்வது போன்றும் பின்னர் அவரை ஒருவழியாக சமானதாம் செய்து மீண்டும் அழைத்து வந்து பாடலை கம்போஸ் செய்ய சொல்கிறார்கள்.

காமெடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் இறுதியில் ’டாக்டர்’ படத்தின் ’செல்லமா’ என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடல் டிக் டாக் தடை பற்றிய பாடல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.