பெயர், புகழ், பணம், மக்கள் செல்வாக்கு என அனைத்தையும்  அளவுக்கு அதிகமாக பெற்றும் ஒரு மனிதன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமாக வாழ்கிறார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். தற்போது இளம் இயக்குநர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தி வருகிறார். பா.ரஞ்சித்துடன் ரஜினி ஜோடி சேர்ந்த கபாலி, காலா ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் மாஸ் ஹிட்டானது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 

ரஜினியுடன் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படம் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்றும், அதன் பின்னர் முழு நேர அரசியலில் தீவிரமாக இறங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இளம் இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்?... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் வளர்ந்ததற்கு மிக முக்கிய காரணம் அவரது மனைவி லதா ரஜினிகாந்த். தில்லு முல்லு பட ஷூட்டிங்கி லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது தான் அவரை முதன் முதலாக சந்தித்தார். அந்த முதல் சந்திப்பிலேயே லதாவிடம் என்னை மணக்க சம்மதமா என்று ரஜினிகாந்த் கேட்டுள்ளார். அந்த சந்திப்பிற்கு பிறகு உருவான காதல் பின்னாளில் கல்யாணம் வரை சென்றது. 

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

 ரஜினி போன்ற பிசியான ஹீரோவால் வீட்டு பொறுப்புகளை எல்லாம் தலையில் சுமக்க முடியாது. அப்படிபட்ட நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகளை வளப்பது, குடும்ப பொறுப்பு, மற்ற நிர்வாகங்கள் அனைத்தும் திறமையாக செயல்படுத்தியது லதா ரஜினிகாந்த் தான். லதா ரஜினிகாந்த் ஒரு பாடகி என்பது அனைவரும் அறிந்த விஷயம். இசை மீதான ஆர்வத்தால் லதா பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். ஆனால் லதா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து படத்திலும் நடித்துள்ளார். 

இதையும் படிங்க:  பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

சரிதா, சிவக்குமார் நடிப்பில் வெளியான அக்னி சாட்சி என்ற படத்தில் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்துடன் ஒரு காட்சிகள் நடித்துள்ளார். உண்மையான நடிகர் ரஜினிகாந்தாகவே நடித்துள்ளார், அவரது மனைவியாக நிஜ மனைவி லதா ரஜினிகாந்தே தோன்றுவார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

"