நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு பொறுப்புகளை வகிக்கிறார் விஷால். இவரை ஆரம்பத்திலிருந்தே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எதிர்த்தவர் சுரேஷ் காமாட்சி.

இவர், நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு ரஜினி, கமல் வந்த போது கூட அதை எதிர்த்தார்.

இவரை சமீபத்தில் யாரோ முகம் தெரியாத நபர்கள் ‘விஷாலையே எதிர்க்கின்றாயா? நீ இருக்க மாட்டாய்’ என பகிரங்கமாக மிரட்டி உள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஷால் தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என சுரேஷ் காமாட்சியே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

விஷால் தரப்பினர்தான் உண்மையாகவே மிரட்டினார்களா? விசாரித்தால் தான் தெரியும்…