Do you know who bought TV rights for three new films including Spider?

விஜய் நடிப்பில் பைரவா படத்திற்கு முன் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட படம் தெறி. அட்லீ முதன்முதலாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கிய இந்தப் படம் செம்ம மாஸ் ஹிட் ஆனது. தற்போது இந்தப் படத்தை சன் தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்தப் படம் மட்டுமின்றி தனுஷின் விஐபி 2, மகேஷ் பாபு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்பைடர் படங்களின் தொலைக்காட்சி உரிமையையும் சன் தொலைக்காட்சியே வாங்கியுள்ளது.

இதுபோன்று படங்களை தொலைக்காட்சி உரிமையை வாங்குவது மட்டுமல்லாது பல புதிய படங்களையும் இத்தொலைக்காட்சி தயாரித்து வருகிறது.

முன்னெல்லாம் புது படங்களில் உரிமையை வாங்கி தீபாவளி, பொங்கல் போன்று விழாக்காலங்களில் டிவியில் போட்டு மக்களை சன் டிவியை விட்டு எழுந்து போக செய்யாமல் பார்த்துக் கொண்ட சன் டிவி சமீப காலங்களாக சீரியலா போட்டு போட்டு கொல்றாங்க.

சனி, ஞாயிறு கூட சீரியல்ல பார்த்த முகங்களை தான் பார்க்க வேண்டி இருக்கு. இப்போது மீண்டும் புது படங்களின் உரிமையை வாங்கியதால் இந்த தீபாவளி “தெறி”க்க விடும் தீபாவளியாக இருக்குமாம் என்று பார்க்கலாம்.