Do you know the value of a dog with Rajini
காலா படத்தில் ரஜினியுடன் நடித்த தெரு நாயின் கோடிக்கணக்கில் கொட்டி வாங்க ரசிகர்களுக்கிடையே போட்டி நிலவி வருகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிக்க ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் காலா. இப்படத்தில் மும்பை லோக்கல் தாதாவாக வரும் ரஜினியுடன் கூட ஒரு நாய் வலம் வருகிறது. இது தெருவில் வளரும் நாட்டு நாய் வகையைச்சேர்ந்தது தானாம். இதை வளர்ப்பவர் புற சென்னையில் தெருவில் கண்டெடுத்து இந்த படத்தில் நடிக்க டிரைனிங் கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் நடித்ததையடுத்து இந்த நாயை ரூ. 2 கோடி வரை கொடுத்து வாங்க வெளிநாட்டில் சிலர் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் இதை வளர்க்கும் சைமன் தன்னுடைய பிள்ளை போல் வளர்ப்பதால் கொடுக்க மனமில்லை என்று மறுத்துள்ளாராம். வெளிநாட்டு நாய்களை பயன்படுத்தாமல் நாட்டு நாய்களை பயன்படுத்திய ரஞ்சித்தை பாராட்டலாம். இந்த முயற்சி தெரு நாய்களை புறம் தள்ளாமல் வளர்க்க ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என ப்ளூ கிராஸ் அமைப்பு பாராட்டியுள்ளது.
