Do you know the concept of spyder film?

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ படம் பயோ பயங்கரவாதம் குறித்த ஒரு புலனாய்வு துறை ஆய்வு சார்ந்த படம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் விறுவிறுப்பாக தயாராகி வரும். இத்திரைபடத்தில் மகேஷ் பாபு கதாநாயனாக நடிக்கிறார் அவர்க்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

வில்லன் கதாபத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஜே. சூரியா நடிக்கிறார் மேலும் பரத், ஆர்.ஜே. பாலாஜி உட்பட பலர் நடிப்பில் மிரட்டலாக உருவாகிவருகிறது இப்படம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் மகேஷ் பாபு தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படமாகும்.

கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று இந்த பட டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. டீசர் வெளியான இரண்டே நாளில் 1 கோடி பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது.

டீசர் வெளியானதை அடுத்து ‘ஸ்பைடர்’ திரைப்படம் ‘சயின்ஸ் பிக்ஷன்‘ படமாக இருக்கலாமோ? என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது.

இதனையடுத்து இப்படத்தின் கதை கரு கசிந்துள்ளது. பயோ பயங்கரவாதம் குறித்த ஒரு புலனாய்வு துறை ஆய்வு சார்ந்த படம் என்று தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இபப்டத்தில் மகேஷ் பாபு ஒரு வித்தியாசமான கதாபத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தனர்.

இதனிடையே இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் போல் ஏற்கனவே வேறு ஒரு படத்தில் வந்துவிட்டதால். மீண்டும் கிளைமாக்ஸ் ஷூட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதநையடுத்து பட ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இத்திரைப்படம் இறுதிகட்ட வேலை நடந்து கொண்டிருப்பதாக தெரியவருகிறது. மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.